21 Feb 2018

தனித்தனியாக முடிவெடுப்பதனாலேயே பாரியபிரச்சினைகள் உருவாகின்றன –மட்டு.செஞ்சிலுவைத் தலைவர்

SHARE
வீட்டிலும்சரி நாட்டிலும்சரி பாரியபிரச்சினைகள் உருவாவதற்கு முக்கியகாரணம் தம்மோடு இருப்போரை மறந்துதனியாக முடிவெடுக்கும் செயற்பாடே ஆகும். தாங்களே அறிவாளிகள் தாங்களே பெரிய அனுபவசாலிகள் என்று பலர் தங்களை தவறாக மதிப்பிட்டுக் கொள்கின்றார்கள். அதனால் தாங்கள் எடுக்கின்ற முடிவுகளேசரி எனவும் அதனையே மற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அதனால் தங்களது முடிவுகளைபிறர் மீதுதிணிக்கின்றனர். இதனால் பாரியபிரச்சினைகள் உருவாகின்றன. இதன் விளைவு குடும்பங்கள் கலைகின்றன, சங்கங்கள் பிரிகின்றன, அமைப்புக்கள் அழிகின்றன. மொத்தத்தில் சமூகமே இதனால் பாதிக்கப்படுகின்றது.
என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தொண்டர்களுக்கான தலைதமைத்துவப் பயிற்சி அச்சங்கத்தின் காரியாலய கேட்போர்கூடத்தில் புதன் கிழமை (21) நடைபெற்றது.  இதன்போது கலந்து கொண்டு மேற்படி பயிற்சியை ஆரம்பித்துவைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. அடிமட்டம் தொடக்கம் மேல்மட்டம் வரையில் தலைமைத்துவப் பண்புகள் வளர்க்கப்படல் வேண்டும். தலைமைத்துவப் பண்புகளிலே தீர்மானம் எடுத்தல் மிகவும்; முக்கியமாக கருதப்படுகின்றது.

உலக வரலாற்றிலே தனியொருவரினாலோ அல்லது ஒருசிலரினாலோ எடுத்த முக்கிய முடிவுகள் தோல்வியிவேயே முடிந்திருக்கின்றன அல்லது நல்ல பலன்களைத் தராமல் போயிருக்கின்றன. கூட்டாக எடுத்த முடிவுகள் வெற்றியளித்திருக்கின்றன. அவை நல்லவிளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. 

எனவே ஒருதிட்டம் வெற்றிபெற வேண்டுமானால், ஒருசமூகம் தனது இலக்கை அடைய வேண்டுமானால், ஒருசமூகம் நிலைபெறவேண்டுமானால்,  சிறப்பானதீர்மானம் எடுக்கின்ற வழிகளைச ம்பந்தப்பட்டவர்கள் அறிந்துகொள்வதற்கு தலைமைத்து வபயிற்சிகள் மிகவும் அவசியமானவை என அவர் மேலும் தெரவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: