மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிசாரால் விhயழக்கிழமை (22) பிற்பகல் ஆடுகளைக் களவெடுத்துச் சென்ற மூவரையும், களவாடிச் சென்ற ஆடுகளையும் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் 2 ஆடுகளைக் களவாடிச் சென்ற மூவரையும், முச்சக்கரவண்டி மற்றும் களவாடிச் சென்ற 2 ஆடுகளையும் கைப்பற்றியதாக வெல்லாவெளி பெலிசார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி சந்தியில் முச்சக்கரவடிண்டிக்கு பெற்றோல் நிரப்புவதற்காக குறித்த முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டுள்ளது. அதனுளிருந்து ஆடு கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதில் அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் சந்தேகம் கொண்டு அருகிலிருந்த பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சித்த கள்வர்களை பொதுமக்கள் ஒன்றிணைந்து மடக்கிப்பிடித்து இஸ்த்தலத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையிலி புதன்கிழமை வெல்லாவெளிப் பகுதியிலிருந்து களவாடிச் சென்றதாகக் கருதப்படும் 38 ஆடுகளை களுவாஞ்சிகுடிப் பகுதியிலிருந்து வெல்லாவெளிப் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் இதில் 2 நபர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மொத்தமாக புதன் (21) மற்றும் வியாழக்கிழமை (22) ஆகிய இரு நாட்களிலும் 40 ஆடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 5 பேரும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மிக அண்மைக்காலமாக வெல்லாவெளிப் பிரதேசத்தில் பொதுமக்கள் வளர்க்கப்படும் ஆடுகள் அதிகளவு காணாமல் போகும் சம்பவங்கள் பதிவாவதாகவும், இதனுடன் தொடர்புடைய மேலும் பலர் இவ்வாறு திரிவதாகவும், அவர்களையும் கைது செய்ய முயற்சித்து வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment