8 Feb 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 3,80327பேர் வாக்களிக்க தகுதி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 3,80327பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என,மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும்மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான, மா.உதயகுமார்தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(08) பிற்பகல்நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மட்டக்களப்புமாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் அலுவலகமாக மட்டக்களப்புஇந்துக்கல்லூரி செயற்படும்.
தேர்தல் கடமைகளுக்காக மாவட்டத்திற்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் 4437 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு மாநகரசபை இரண்டு நகரசபை ஒன்பதுபிரதேசசபைகள் உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைநடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதாவது, 238 மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக 901 பெண் பிரதிநிதிகள்உட்பட 2736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 3,80327பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இவர்கள்மட்டக்களப்பு மாவட்டத்தில் 457 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களில் 124 வட்டாரங்கள் தொகுதிஅடிப்படையிலும், 20வாக்கு நிலையங்களில்  வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை கண்காணிப்பதற்காக பவ்ரல், கபே, ட்ரான்ஸ் பேரன்ஸ், சி.எம்.வி.பி.போன்ற அமைப்புகள் ஈடுபடவுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ்திணைக்களம் செய்துள்ளது.

இதன்போது, ஒரு புள்ளடியை மட்டும் இட்டு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10ஆம் திகதி காலை 07மணியிலிருந்து பிற்பகல் 04மணி வரையில் சுதந்திரமானமுறையில் தங்களது வாக்குகளை அளிக்கமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 222 தேர்தல் முறைப்பாடுகள்பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 185முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: