17 Feb 2018

குருக்கள்மடம் சிவநெறிமன்றத்தின் புதியநிர்வாகிகள் தெரிவு - 2018

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ல ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் 01.01.1975 முதல் இயங்கி வரும் சிவநெறி மன்றத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் மேற்படி ஆலய முன்றலில் மன்றத்தின் தலைவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி தேசாபிமானியும், அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய வல்லிபுரம் குணசேகரம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது 2018 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது தலைவராக மீண்டும், வல்லிபுரம் குணசேகரம் அவர்களும், 
உப தலைவராக வல்லிபுரம் நேமிநாதனும், செயலாளராக விஸ்வலிங்கம் ராஜகுமாரும், உப செயலாளராக விமலேஸ்வரன்  பிரசாந்தும் , பொருளாளராக  இராஜதுரை கேமராஜ்ஜூம், உப பொருளாளர் இராசநாயகம் பத்மநாதனும், கணக்காய்வாளர் செல்லத்துரை வரதனும், தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் இதன்போது பதின்மூன்று பேர் கொண்ட நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன், ஆலோசகர்களாக ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய  பிரதம குரு சிவஸ்ரீ டிவேஸ்காந் சர்மா அவர்களும், ஓய்வுபெற்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தங்கவேலாயுதன், அவர்களும், போஷகராக ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய பரிபாலன சபைத்தலைவர் வீ.மகேஸ்வரன்; அவர்களும், தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: