13 Dec 2025

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட மோட்ச தீப ஆராதனை பூஜை.

SHARE

 

இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்ம விமோசனம் வேட்டி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட மோட்ச தீப ஆராதனை பூஜை.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயரிழந்த மக்களின் ஆத்ம விமோசனம் வேட்டி மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில்; வெள்ளிக்கிழமை(12.12.2025)  மாலை 5.30 மணிக்கு விசேட மோட்ச தீப ஆராதனை பூஜை நடைபெற்றது. 

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட பூஜை நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் மலையகம், மற்றும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களிலும் இதுவரையில் 630 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 200 இற்கு றே;பட்டோர்  காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்ம விமோசனம் வேண்டி நடைபெற்றது.

இதன்போது உயிரிழந்த ஆத்மாக்களுக்காக வேண்டி அடைக்கலப்பத்து  பதிகம் பாடப்பட்டு விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது. 

பூஜைகள் நிகழ்வுகளை ஆலய பிரதம குழு கு.சிறிஸ்கந்தராஜா குருக்கள் மற்றும் பு.சடாச்சரசர்மா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: