இந்துசமய அறநெறிப்பாடசாலை மாணவர்களது எழுத்தாற்றல், பேச்சாற்றல், சித்திரம் வரைதல், கதாப்பிரசங்கம், நடனம், நாடகம், வில்லுப்பாட்டு மற்றும் பண்ணிசை போன்றவற்றில் ஆக்கத்திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாவருடம் பிரதேசமட்டம், மாவட்டமட்டம் மற்றும் தேசியமட்டத்தில் ஆக்கத்திறன்களை மதிப்பீடுசெய்து அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்று கொழும்பு இராமகிருஸ்ணமிஷன் மண்டபத்தில் இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விருது வழங்கலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் அறநெறிப்பாடசாலைகளில் ஒன்றான குருக்கள்மடம் சிவநெறிமன்ற அறநெறிப்பாடசாலையில் கல்விபயிலும் ஜெயக்குமார் பிரவீன் 9 ஆம் வகுப்பு பிரிவில் கதாப்பிரசங்கப் போட்டியில் தேசியமட்டத்தில் முதலாம் இடத்தினையும் பேச்சாற்றல் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுதனக்கும் தனது குடும்பத்திற்கும் சிவநெறிமன்ற அறநெறிப்பாடசாலைக்கும் சிவநெறிமன்றத்திற்கும் குருக்கள்மடம் கிராமம் மற்றும் பிரதேசத்திற்கும் பெருமைடிசேர்த்துள்ளார்.
இவருக்கும் இவருக்குவழிகாட்டியாக இருந்த அறநெறிப்பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் சிவநெறிமன்றம் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகமன்றத்தின் தலைவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி தேசாபிமானியும், அகில இலங்கை சமாதானநீதிவானுமாகிய வல்லிபுரம் குணசேகரம் தெரிவித்தார்.
கடந்த வருடங்களிலும் இந்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள் இவ்வாறு பல சாதனைககளைப் புரிந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


0 Comments:
Post a Comment