மட்டக்களப்பு - தொப்பிகல அரசாங்க காட்டில் சட்ட விரோதமாக வெட்டி நுட்பமான முறையில்
துவிச்சக்கர வண்டிகளில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை சனிக்கிழமை (17.02.2018) மாலை ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
உடலில் எண்ணெய் பூசிய நிலையில் துவிச்சக்கர வண்டிகளை தள்ளிக்கொண்டு வந்த நபர்கள் ஆறுபேரும் சைக்கிள்களை கைவிட்டு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு துவிச்சக்கர வண்டிகளில் சுமார் ஆறு அடி நீளமுடைய 26 மரக்குற்றிகள் காணப்பட்டன.
கைவிட்டுச்செல்லப்பட்டுள்ள பொருட்களைக்கொண்டு சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment