7 Feb 2018

10 ஆம் திகதி மாலை வெளிவெரும் தேர்தல் முடிவுகளால் சிலருக்கு பேரிடியைத் தரும் -தேவதாஸ்

SHARE
சலுகைகளுக்குச் சோரம்போயுள்ள ஒருசிலருக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை வெளிவரும் தேர்தல் முடிவுகள் அவர்கள் மத்தியில் ஓர் பேரிடியைத் தரும்.
என உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வீட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு – களுதாவளை வடக்கு வட்டாரத்தில் போட்டியிடும், எம்.தேவதாசன் தெரிவிதுள்ளார்.

களுவளை வடக்கு வட்டாரத்தில் புதன் கிழமை (07) பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

எதிர்வரும் சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களுதாவளைக்கிராம மக்கள் அனைவரும்  ஒன்றுதிரண்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்கழித்து தமிழ் தேசியத்திற்கும், களுதாவளைக் கிராம அபிவிருத்தியை நிலைநாட்டவும் ஒத்துழைப்பு வழங்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

களுதாவளை கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தாலும், இந்தப் பிரதேசத்திற்கு என்னாலான அனைத்து தொண்டர் சேவைகளையும் கடந்த காலத்திலிருந்து செய்து வருகின்றேன். எனது இச்சேவையை மேலும் திறம்படச் செய்வதற்கு இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக களம் அமைத்துத் தந்துள்ளது. கருதாவளையிலுள்ள அனைவரும் எனது சொந்தங்கள், எனவே எனது சொந்தங்கள் யாரும் மாற்றுக் கட்சிகளையோ, அல்லது தேசியக் கட்சிகளையோ ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். 

மிக நீண்டகாலமிருந்து தமிழர்களின் விடிவுக்காய்க் குரல் கொடுத்துக் கொண்டும், அபிவிருத்திகளையும் செய்து கொண்டும் செயற்பட்டுவரும் தமிழ் மக்களின் ஒரே ஒரு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை எமது சொந்தங்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். 

எமது கிராம மக்கள் அனைவரும், வீட்டுச் சின்னத்திற்கு மாத்திரம்தான் வாக்களிக்கத் தீர்மானித்துள்ள இந்நிலையில், அற்ப சலுகைகளுக்காகவும், ஒருசில சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிலரும் மக்கள் மத்தியில் வேறு கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு மக்கள் செவிசாய்க்காமல் எதிர்வருகின்ற சனிக்கிழமை காலைவேளையிலே அனைவரும் சென்று வீட்டுச் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்து விட்டு வரவும் என்பதை உணர்வுடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கட்சிகளின் பின்னால் திரியும் எமது உறவுகளும் இந்நிலையில் சற்றுச் சிந்திக்க வேண்டும் முதல் நமது வீட்டுக் காரனைத்தான் நேசிக்க வேண்டும் அதன் பின்னர்தான் ஏனையோரைக் கவனிக்க வேண்டும். எனவே பேரினவாதக் கட்சியின் பின்னாலுள்ளவர்களும், நமது ஊரின் ஒற்றுமை, அபிவிருத்தி, அரசியல் இருப்பு, உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசியத்தின் பால் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இருந்த போதிலும், சலுகைகளுக்குச் சோரம்போயுள்ள ஒருசிலருக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை வெளிவரும் தேர்தல் முடிவுகள் அவர்கள் மத்தியில் ஓர் பேரிடியைத் தரும் என அவர் இதன்போது தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: