மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக் கோட்டப் பிரிவிலுள்ள மண்டூர் 39ஆம் கொலனி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைச் சமையலறைக்கு வந்த காட்டு யானையால் கட்டிடம் சேதமாக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு மேற்படி பாடசாலைக்குச் சென்ற காட்டு யானை அங்கு சமையலறையில் மாhணவர்களின் காலை உணவைத் தயாரிப்பதற்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உப்பு, அரிசி என்பனவற்றை உண்டு விட்டுச் சென்றுள்ளதாக பாடசாலை அதிபர் ரீ. திருவருட்செல்வன் தெரிவித்தார்.
அத்துடன் இவற்றை உண்பதற்காக பாடசாலைச் சமையலறையை சேதமாக்கி விட்டே யானை உள்ளே நுழைந்துள்ளது.
39ஆம் கொலனியை அண்டியுள்ள காட்டுப் பகுதியில் நடமாடும் பெரும் எண்ணிக்கையிலான காட்டு யானைகள் அவ்வப்போது கிராமத்திற்குள் நுழைந்து உப்பு, அரிசி, நெல் போன்றவற்றை உண்டு வருவதாகவும் அதன் காரணமாக வீடுகள் செதமாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
காட்டு யானைகளுக்கு மிகவும் கவர்ச்சியான ருசிகரமான உணவு உப்பு என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment