மட்டக்களப்பு நகர் வாவிக்கரை வீதி 01 இல் மேற்கொள்ளப்படும் வாவியோர நடைபாதை அமைக்கும் வேலைப்பாடுகளை கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் மற்றும் மாநகரசபைப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் வியாழக் கிழமை (04) சென்று பார்வையிட்டனர்.
கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் அவர்கள் அமைச்சராக இருந்த சமயம் மேற்கொள்ளப்பட்ட பணிப்புரையின் கீழ் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை திணைக்களத்தின் சுற்றுலா மையங்களை அழகுபடுத்தல் திட்டத்தின் மூலம் ரூபா 03 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு நகர் வாவிக்கரை வீதி 01 இல் அமைக்கப்படுகின்ற வாவியோர நடைபாதை அமைக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது பூர்த்தியாகின்ற நிலையில் அவ் வேலைப்பாட்டினைப் பார்வையிடுவதற்காகவே கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் பொறியியலாளர் தேவதீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாவியோர நடைபாதை 150 மீற்றர்கள் வரையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இத்திட்டம் முடிவுறும் தருவாயில் இருக்கின்ற இவ்வேலைப்பாடு இன்னும் ஒரு வாரத்தினுள் பூர்த்தியாக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக விடப்படவுள்ளதாக இதன் போது முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment