யுத்தகாலத்தில் இளைஞர்களை போர்க்களத்திற்கு அதிகளவு அனுப்பியது இந்த பட்டிருப்பு பிரதேசமாகும். இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து உயிழிழந்த அனைத்து போராளிகளுக்கும், யுத்தத்தால் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி மக்களுக்கும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒட்டுமொத்தமாக பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசக் கிளைக் காரியாலயம் ஒன்று வெள்ளிக்கிழமை (05) மாலை பட்டிருப்பில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தைத் திறந்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
ஆயுதத்தின் பால் நம்பிக்கையிழந்து கருத்தை கருத்தால் வெல்லக்கூடிய கிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டு அதனூடாக தமிழர்களின் ஒற்றுமை, உரிமை, சமத்துவம் என்பவற்றினூடாக எமது உரிமையினையும் வென்றெடுத்து ஒரு நிலையான அபிவிருதியின் பால் பயணித்தோம். கிழக்கு மாகாணத்தில் 3 இனங்களும் கௌரவத்துடன் வாழ்வதற்கு வழிசெய்தோம், தமிழர்கள் 42 வீதமும், முஸ்லிங்கள் 38 வீதமும், சிங்களவர்கள் 20 வீதமுமாக இருக்கும் இந்த கிழக்கு மாகாணத்தில் ஒரு இனம் மற்றய இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்காத அளவிற்கு கடந்த 2012 ஆம் ஆண்டுவரை நாம் ஆட்சி செய்து காட்டினோம்.
பின்னர் தமிழர்களின் கையிலிருந்த கிழக்கு மாகாண நிருவாகத்தை தமிழர்களின் கையில் இருக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது பின்னர் 2012 ஆம் ஆண்டு கிழக்கில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்ததையடுத்து, 2015 ஆம் மறுமொருமுறையும் கிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிது. இக்காலகட்டத்தில் 7 ஆசனங்களை வைத்துக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து முதலமைச்சர் பதவியையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது.
பின்னர் தமிழர்களின் பிரதேசங்களுக்கு வந்த அபிவிருத்திகள் அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன, இன்றுவரை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் ஆசிரியர்களின் தட்டுப்பாடு, மயானப்பிரச்சனை, மைதானப்பிரச்சனை, வடிகானில்லாப் பிரச்சனை, என அனைத்தும் தலைதூக்கி நிற்கின்ற இந்நிலையில் வந்த நிதிகளெல்லாம் வேறு பிரதேசங்களுக்கு கொடுக்கப்பட்டன.
தமிழர்களின் நிருவாகங்கள் பறிக்கப்பட்டன, நிலங்கள் பறிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களில் கிழக்கிலுள்ள தமிழர்கள் அரசியல் அனாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். இந்நிலையிலிருந்து தமிழர்கள் விடுபடவேண்டுமாக இருந்தல், அடிப்படையிலிருக்கின்ற உள்ளுராட்சி மன்றத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆணை வழங்க வேண்டும். இதனை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.
யுத்தகாலத்தில் அதிகளவு போர்க்களத்திற்கு அனுப்பியது இந்த பட்டிருப்பு பிரதேசமாகும். இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து உயிரிழந்த அனைத்து போராளிகளுக்கும், யுத்தத்தால் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி மக்களுக்கும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒட்டுமொத்தமாக பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.
1976 ஆம் அண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களின் கைகளில் ஆயுதங்களைத் திணித்தவர்கள், போராட்ட உச்சக்காலத்தில் தாங்கள் சொகுசாக இருப்பதற்குரிய வாய்ப்புக்களைத் தேடியிருந்தார்கள்.
எந்த நாட்டிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட இரணுவ வெற்றிகள் அரசியல் மயமாக்கப்பட்டால்தான் அந்த போராட்டம் முழுமையடையும். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இராணுவ வெற்றிகளை அரசில் மயமாக்குக்கின்ற முகமாக சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பியிருந்தார்கள். அந்தப் பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியாகச் செய்யாததன் காணரமாகத்தான் உரிமைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிகள் அனைத்தும் பயங்கரவாத வெற்றிகளாக சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டிருந்தன. அதன் விளைவாக முள்ளிவாய்க்காலில் எம்மினம் கொண்றொளிக்கப்படும்போது சர்வதேசம் மௌனிகளாகப் பார்த்துக் கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளது இராணுவ வெற்றிகளை அரசில் மயமாக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் தேசசியக் கூட்டமைப்புத்தான் பொறுப்புக் கூறவேண்டியது.
நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நல்லாட்சி அரசுக்கு முட்டுக்கொடுக்கின்ற தமிழ் தேசிய்க கூட்டமைப்பினர் தமிழ் சமூகத்திற்காக சாதித்துக் கொடுத்தது என்ன? , கிழக்கு மாகாணசபையில் இணக்க ஆட்சி என்று கொண்டு எதைச் செய்தார்கள்? , அதுபோல் உள்ளுராட்சி சபையில் எதைச் செய்யப் போகின்றாரகள், பறிக்கப்படும் காணிகளுக்கு நியாமம் கற்பிக்கப் போகின்றார்களா? , மறுக்கப்டுகின்ற வேலைவாய்ப்புக்களுக்கு நியாயம் தேடப்போகின்றார்களா? , என்கின்ற நிலமையினை தமிழர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment