ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரசியல் கட்சியொன்றின் உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை ஏறாவூர் நகர பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்தது.
காயமடைந்த இருவரும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவ்விபத்தில் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் நல்லாட்சிக்கான ம
hல், மிச்நகரை சேர்ந்த ஜவாஹிர் மௌலவி காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த ஹனிபா (59)என்பவர் ஏறாவூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் ; (National Front for Good Governance) போட்டியிடும் எம். ஜவாஹிர் (வயது 30) என்பவரும் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த எம். ஹனிபா (வயது 59) என்பவரும் படுகாமயடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய வேட்பாளருக்கு சிரசில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால் அவரை மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment