12 Dec 2017

முச்சக்கரவண்டி பாலத்திற்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயம்

SHARE
கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை மயிலம்பாவெளி பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த பாலத்திற்குள் பாய்ந்ததில் அதில் பயணம் செய்த ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 10.12.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி அவரது மனைவி மற்றும் 3 சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: