ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள காளிகோயில் வீதி மற்றும் புகையிரத நிலைய வீதி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை 10.12.2017 ;பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தைத் தோற்றுவித்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாடசாலை மாணவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களும் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment