தமிழரசுக் கட்சிக்காக கடந்த 52 வருடங்களாகத் தொண்டாற்றிய தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்து வருவதால் தான் அதிலிருந்து விலகி விட்டதாக அதிரடி அறிவிப்பைச் செய்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமலை).
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிவிட்டதான அதிரடி உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் ஞாயிற்றுக்கிழமை 17.12.2017 வெளியிட்டார்.
அக்கட்சியிருந்து விலகிக் கொண்ட தான் இனி சுயாதீனமாக செயற்படப்போவதாகவும், எதிர்வருகின்ற தேர்தல்களில் சுயமாக செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அதன் உயர் பீட அங்கத்தவர்கள் சகலரிடத்திலும் தான் புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து பல முறை எடுத்துக் கூறியும் தன்னை அவர்கள் புறக்கணித்து விட்டதாகவும் அதிருப்தி வெளியிட்டார்.
இவ்வாண்டின் ஜனவரி மாதம் தன்னை தமிழர் விடுதலைக் கூட்டணி அங்கத்துவத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு தன்னை தமிழரசுக் கட்சி கேட்டுக் கொண்டதாக கூறிய அவர், கடந்த 11 மாதங்களாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும் கூறினார்.
தனக்கு அதரவளிக்கும் பிரதேச மக்களுடன் பல தடவைகள் நடாத்திய ஆலோசனைக் கூட்டம் மற்றும் கருத்துப் பகிர்வின் அடிப்படையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே தான் தனித்து இயங்கும் முடிவை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை இனபேதமில்லாது ஆளப்பட வேண்டும் என்ற போதிலும் தனது தமிழ் சமூகம் வேறு எவராலும் ஆளப்படுவதை தான் ஒருபோதும் ஏற்றுக்ட கொள்ளப் போவதில்லை என்றும் தான் இனிமேல் தமிழ் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் கட்சித் தாவல்களை எதிர் பார்க்கலாம் என கடந்த வாரம் எதிர்வு கூறியிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.
0 Comments:
Post a Comment