18 Dec 2017

மூன்றாவது அடுக்கு மாடியிலிருந்த புளக் கல் உச்சந் தலையில் விழுந்ததில் தொழிலாளி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

SHARE
மூன்றாவது அடுக்கு மாடியிலிருந்த புளக் கல் உச்சந் தலையில் விழுந்ததில் தொழிலாளி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கட்டிடத் தொழிலாளியொருவரின் உச்சந் தலையில் மூன்றாவது அடுக்கு மாடியிலிருந்த விழுந்த புளக் கல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எறாவூர் பொலி
ஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகத்தில் கட்டிட நிருமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பிபிலை பிரதேசத்தைச்  சேர்ந்த அரவிந்த (வயது 23) என்ற இளைஞனே பாதிக்கப்பட்டவராவார்.

ஞாயிற்றுக்கிழமை 17.12.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஏறாவூர் மணிக்கூண்;டு கோபுரச் சந்தியில் சைக்கிளில் சென்றவர் மீது அருகாக சென்ற மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டதில் சைக்கிளில் சென்றவர் நடுவீதியில் தலை பாதிக்கப்பட விழுந்து காயமடைந்துள்ளார்.

உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சைக்கிளோட்டி பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: