21 Dec 2017

காத்தான்குடி நகர சபைக்கான சு.காவின் வேட்புமனு ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல்

SHARE
காத்தான்குடி நகர சபைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு வியாழக்கிழமை (21) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல் செய்யப்பட்டது. 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வியாழக் கிழமை நண்பகல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் காத்தான்குடி நகர சபையை வெற்றிகொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிறந்த வேட்பாளர்களை தொகுதிகளில் களமிறக்கியுள்ளோம். மக்களின் கருத்துக்களுக்கு அமையவே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தேர்தலை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றோம் என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: