நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் மாற்றத்தினை எதிர்பார்த்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சூரியன் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இரா.துரைரெட்ணம்….
சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நாங்கள் அண்ணளவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 80 வட்டாரங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட ஒட்டு மொத்த மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த 80 வட்டாரங்களிலும் திறமையான வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். பெரும்பான்மையான வட்டாரங்களைக் கைப்பற்றுவோம். இத் தேர்தலைப் பொறுத்தவரையில் கிராம ரீதியான அபிவிருத்தியை மேற்கொள்வது, பெண்களின் 25 சதவீதத்தினை உறுதிப்படுத்துவது, இளைஞர் தலைமைத்துவத்தினை உருவாக்குவது, மத்திய அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் ரீதியான அழுத்தத்தினைக் கொடுப்பது, ஆகிய நான்கு திட்டமான தேர்தல் விஞ்ஞாபனமாக எங்களது செயல்வடிவம் இருக்கும் கண்டிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சூரியன் சின்னம் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment