தெமேசனின் கொலைக்குரிய சூத்திரராரிகளுக்கு நீதியாக தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரி தெமேசனின் மரண வீட்டுக்கு முன்னால் வியாழக்கிழமை (28) மாலை இளைஞர்கள், கிராமத்தவர்கள் என பலரும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரேதத்தைத் தங்கியவாறு படுகொலை செய்யப்பட்ட புனித அருளானந்தர் தேவாலயத்திற்கு பேரணியாக வந்து பின்னர் அங்கு வைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய வளாகத்தினுள் செவ்வாய்கிழமை (26) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் கத்திக் குத்துக்கிலக்காகி பரிதாபகரமான முறையில் உயிரிழந்த பெரியகல்லாறு முதலாம் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியராகக் கடடைபுரிந்து வரும் யேசுதாசன் தெமேசனின் உடல் வியாழக் கிழமை (28) மாலை பெரியகல்லாறு கிராமமே கண்ணீர்மல்க புதைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் சந்தேக நபர்களான கிராமசேவையாளர் மார்க்கண்டு பரிமளராசா (வயது 54) மற்றும் அவரது மகன் பரிமளராசா அபிசனன் (வயது 19) ஆகியோர் ஆஜர் செய்யப்பட்டபொழுது அவர்களை ஜனவரி 11 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு அன்றைய தினத்திற்கு திகதி குறிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment