களுவாஞ்சிகுடி பிரதான வீதியில இடம் பெற்ற விபத்தித்து சம்பவத்தில் பலத்த காயங்களுடன் அபாத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த இளம் குடும்பபெண்மணி சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்ற இவ்விப்த்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….
மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த கார்வண்டி ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த பெண்மணியுடன் நேருக்கு நேர் மேதியதால் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கார்வண்டி மோதிய வேகத்தினால் குறித்த பெண்மணியை சிறுதூரம் தூக்கியெறியப்பட்டதாகவும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டடிருந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெதரிவித்திருந்தனர்.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் மூளை, முள்ளந்தண்டு என்பன பாதிப்புக்குள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவத்தின் தொடர்ச்சியாக
பெண்மணியுடன் மோதிய சாரதி செய்வதறியாது வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டடிருந்து முச்சக்கரவண்டி இரண்டுடனும் மோட்டார் சைக்கிள் இரண்டுடனும் மோதிய நிலையில் புடைவைக்கடை ஒன்றின் முன்பகுதியினுள் புகுந்த நிலையிலையே கார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடைக்கு முன்னால் நின்றவர்கள் தெய்வாதினமாக உயிர்தப்பியதாகவும் அறியமுடிகின்றது.
குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 28 வயதுடை புவிராசா நிலாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார
0 Comments:
Post a Comment