6 Dec 2017

சமுதாய அடிப்படை அமைப்புகள் பற்றி விளக்கமளிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவடத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் சமுதாய அடிப்படை அமைப்புகள் பற்றியும் அமைப்புக்களை அலுப்படுத்தல்  தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையக அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்செயலமர்வு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள அனைத்து சமுர்த்திப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் பகுதி பகுதியாக நடாத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஓரு பகுதியினருக்கான செயலமர்வு சனிக் கிழமை (02) இடம்பெற்றது.
சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் பி. குணரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் சமுர்த்தி திணைக்களத்தால் ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்ட சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், முகாமைத்துவப் பணிப்பாளர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினூடாக எதிர்வரும் காலங்களில் மக்களுக்கும், கிராமங்களுக்குமான அபிவிருத்திகளை மேலும் வினைத்திறன் மிக்க வகையில் பெற்றுக்கொடுக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதனுடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்பத்தை வலுப்படுத்துவதோடு மேலும் அக்குடும்பத்தை, கல்வி, அபாருளாதாரம், அரசியல், சுகாதாரம், கலாசாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் வலுவூட்டி அவர்களை உயர்த்துவதே நோக்கமாகும் எனவும்  இதன்போது இங்கு உரையாற்றிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. ‪



SHARE

Author: verified_user

0 Comments: