6 Dec 2017

குற்றச் செயல்கள் பற்றிப் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சிறந்த பங்காற்ற முடியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சிந்தக பீரிஸ்

SHARE
குற்றச் செயல்கள் பற்றிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்குவதிலும் சமூக சீராக்கத்திலும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சிறந்த பங்காற்ற முடியும்  என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட விழிப்பூட்டல் நிகழ்வு ஏறாவூர் பொலிஸ் நிலைய பயிற்சி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 03.12.2017 இடம்பெற்றது.

இங்கு முச்சக்கர வண்டிச் சாரதிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய சிந்தக பீரிஸ், போதைப் பொருள் கடத்தல், சிறுவர் பெண்களுக்கெதிரான வன்முறைகள், மற்றுமுள்ள குற்றச் செயல்கள் இடம்பெறும் அனைத்து சந்தர்ப்பர்ப்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளின் தேவை ஏற்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சிறிய மற்றும் பெருங் குற்றங்களிலும் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த மாதம் சவுக்கடியில் இடம்பெற்ற இளம் தாய் மற்றும் சிறுவன் படுகொலையில் நேரடியாக முச்சக்கர வண்டிச் சாரதி சம்பந்தப்பட்டு பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, வீடு புகுந்து கொள்ளையடிப்பது பற்றியும் அதே சந்தேக நபர் களுவன்கேணியிலும் ஈடுபட்டிருந்தது விசாரணைகளின் மூலம்  தெரியவந்துள்ளது.
எனவே, முச்சக்கர வண்டிச் சாரதிகள் பொதுமக்களினதும் பொலிசாரினதும் நம்பிக்கையானவர்களாக இருப்பதோடு குற்றச் செயல்களைப் புரியாமலும், குற்றச் செயல்களைத் தடுப்பதில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும் விபத்து, இடர் ஏற்படும் ஆபத்து வேளைகளில் உதவுபவர்களாகவும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் உள்ளார்கள்.

அதேவேளை, விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்ற வேளைகளில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் மனிதாபிமானத்துடன் விரைந்து பணியாற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். உயிர் காப்பு நடடிக்கையில் பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

படுகாயமடைந்தவர்களை உடனடி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சேர்ப்பிப்பதில் தங்களது உச்சக்கட்ட மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும்.
பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவரின் பின்னணி பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. உடனடியாக உயிர் காப்பு என்பது முக்கியம்.”என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: