6 Dec 2017

கணேசபிள்ளை டிலக்சன் அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.

SHARE
மட்டக்களப்பு  களுதாவளையினை சேர்ந்த கணேசபிள்ளை டிலக்சன் அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக வியாழக் கிழமை (30) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மட்டக்களப்பு, களுதாவளை, சாஸ்திரியார் வீதியினை சேர்ந்த  கணேசபிள்ளை டிலக்சன் அவர்கள் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின்  45(4) ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள  அவர்களால் இலங்கை தீவு முழுவதற்குமான  சமாதான நீதவானாக, நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.     


SHARE

Author: verified_user

0 Comments: