16 Dec 2017

செட்டிபாளையம் பிரதானவீதியில் பாரிய விபத்து

SHARE
செட்டிபாளையம் பிரதானவீதியில் வெள்ளிக்கிழமை (15) ஏறாவூரிலிருந்து கல்முனைக்கு கோழிகளை ஏற்றிச்சென்ற மினிரக லொறி விபத்துக்குள்ளாகி மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் மின்கம்பம் ஒன்றும் உடைந்துள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் இவ்விபத்து சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளார்கள் என களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சீ.எஸ்.ரத்நாயக்கா தெரிவித்தார். 

கோழகளை ஏற்றிவந்த லொறி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றார்கள்.

இதன்போது மின்கம்பத்தையும், மதிலையும் உடைத்துவிட்டு லொறி நிலத்திற்குள் ஒரு அடி அளவிற்கு புகுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.வாகனத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.குறித்த மின்கம்பம் உடைந்து சரிந்துள்ளதால் தனியாருக்கு உரித்தான மின்இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

நித்திரையில் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். வெளியில் பாரிய சத்தம் ஒன்று எங்களுக்கு உணரப்பட்டது. இதனை அறிந்து கொண்டும், உடனே வெளியே பார்த்தபோது ஏதோ அழுகைச்சத்தம் கேட்டது. உடனே நாங்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலகத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்தோம். இதில் வாகனத்தை செலுத்தி வந்த சாரதி, உதவியாளர்கள் மூவரையும் பொதுமக்கள், பொலிசார் மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள். என அயலவர்கள் தெரிவித்தனர். 









SHARE

Author: verified_user

0 Comments: