களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த திருச்சபையின் கிறிஸ்து பிறப்பு இன்னிசை விழாவும், ஒளிவிழா நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை (17) திருச்சபையின் போதகர் அருட்திரு ஏ.ஆர்.மகேந்திரன் தலைமையில் களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லாறு சேகர முகாமைக் குரு அருட்திரு ஜே.சீனிதம்பி, கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் அருட்திரு ஜே.ஜே.ஞானசீலன், குறுமண்வெளி மெதடிஸ்த திருச்சபையின் ஊழியர் அருட்சகோதரர் என்.சாந்தி, பழுகாமம் திருச்சபையின் ஊழியர் அருட்சகோதரி ஏ.சுலோஜினி, சேகர சீடத்துவ ஊக்கிரானகாரர் டி.ஜே.ஜோயஸ் மனோஜ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன் திருச்சபையின் ஞாயிறு பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களினால் பல்வேறு கலை நிகழ்வுகள், நாடகங்கள், கரோல் கீதங்கள், மற்றும் கிறிஸ்து பிறப்புக் காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன் ஜெப ஆராதனை, நத்தார் தாத்தா வருகை போன்ற நிகழ்வுகளும் இவ்விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment