20 Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது - கருணா

SHARE
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. தமிழ் மக்களை விலை பேசி விற்றிருக்கின்றது. இது போன்ற பாரிய துரோகங்களைச் செய்திருக்கின்றது. நேற்றுக் கூட சுமந்திரன் அவர்கள் அமைச்சுப்பதவியைப் பெற்றிருக்கின்றார் என்ற விடயத்தினையும் அறிந்தோம் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் வி.முரளிதரன் தெரிவித்தார். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை புதன்கிழமை (20) முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி - சுயேட்சைக்குழு தாக்கல் செய்தவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் தெரிவி;கையில்…. 

மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று, கோரளைப்பற்று வடக்கு  ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம். தனித்தமிழ் கட்சியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ் மக்களது பாதுகாப்பு, இருப்பைப்பொதுகாப்பதற்காகவும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் எங்களது வேட்பாளர்களை கொண்டு வந்திருக்கிறோம் எங்களது கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக வாக்களிக்க வேண்டும். 

எங்களுடைய கட்சிக்கு அளிக்கின்ற வாக்கின் மூலமே தமிழர்களின் இருப்பை எமது மாவட்டத்தில் பாதுகாக்க முடியும். இங்கு பல கட்சிகள் போட்டியிடுகின்றன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு அளிக்கின்ற வாக்கோ, சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு அளிக்கின்ற  வாக்கோ அது முஸ்லிம் தலைவர்களை பலப்படுத்துவதற்கான வாக்காகவே அது அமையும். 

ஆகவே சிங்களக்கட்சிகளை வீசி எறிந்துவிட்டு தமிழ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போலத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. தமிழ் மக்களை விலை பேசி விற்றிருக்கின்றது. இது போன்ற பாரிய துரோகங்களைச் செய்திருக்கின்றது. நேற்றுக் கூட சுமந்திரன் அவர்கள் அமைச்சுப்பதவியைப் பெற்றிருக்கின்றார் என்ற விடயத்தினையும் அறிந்தோம். 
முன்னாள் போராளிகளால் தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஊடகங்களில் தெரிவித்து பொய்ப்பிரச்சாரத்தை, ஒரு துரோகத்தனத்தை தமிழ் மக்கள் மத்தியில் சுமந்திரன் செய்து வருகிறார். இது போன்ற கூட்டுகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றையலெ;லாம் புரிந்து கொண்டு மக்கள் எல்லோரும் எங்களின் பின்னால் அணிதிரளுங்கள் என்றார். 


SHARE

Author: verified_user

0 Comments: