கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு பதுளை வீதி கொடுவாமடுவில் வியாழக்கிழமை 02.11.2017 இடம்பெற்ற வீதி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயங்களக்குள்ளான வயோதிபர் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான சிறிய ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியருகில் நின்றிருந்தவர்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment