இலங்கையின் தென்கிழக்காக தென்மேற்கு வங்காகளவிரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டலக் குழப்பம் (Low level Atmospheric
Disturbance) காரணமாக சனிக்கிழமை (2017.11.25) மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் (26.11.201) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைகொண்ட காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அனேகமான பகுதிகள் மேகமூட்டமாகக் காணப்படும். என வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி க.சூரியகுமாரன் சனிக்கிழமை காலை (25) தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் சற்றுப்பலமான காற்று வீசக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் அனேகமான பகுதிகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவுசெய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சிலபகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும். இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும். எனவே பொது மக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளுகின்றோம்.
மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்களுக்கான கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
காலி முதல் அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடான காங்னேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் அதிகமழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். ஏனைய கடல் கடல் பிராந்தியங்களிலும் மழை காணப்படும்.
கொழும்பு முதல் காங்னேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 கிலோமீற்றர் முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும்.
கடல் பிராந்தியங்களில் இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் இந்தக் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசுவதன் காரணத்தினால் இந்த சந்தர்ப்பங்களில் கடலானது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment