மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்ற மாணிக்கம் -உதயகுமார் தான் படித்த பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த வியாழக்கிழமை (23) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்ற மாணிக்கம் உதயகுமார் அவர் படித்த பாடசாலையை மறக்காமலும், பாடசாலைக்குரிய மதிப்பை பேணும் நோக்கில் வெள்ளிக்கிழமை (24) திடீர் விஜயத்தை மேற்கொண்டார். மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் பாடசாலை பழைய மாணவசங்க செயலாளர் எஸ்.சசிதரன்,பழைய மாணவர்களான நவரெட்ணம் மௌலீசன்(நரம்பியல் வைத்திய அதிகாரி , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை), ரீ.கிரிதரன் தெழிலதிபர், என்.தினேஸ்குமார் (மக்கள் வங்கி முகாமையாளர்), கே.ரவிசங்கர், கே.முரளிதரன் ஆகியோர்கள் அரச அதிபரை மலர்மாலை அணிவித்து வரவேற்றார்கள்.
இதன்போது உத்தியோக பூர்வமாக பாடசாலையை தரிசித்து அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்களையும் கைகொடுத்து சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இதன்போது தரிசன குறிப்பேட்டில் கையெழுத்திட்டார் அரசாங்க அதிபரின் முன்னாள் அதிபரான பிரின்ஸ் காசிநாதரையும் (முன்னாள் மட்டக்களப்பு முதன்மை பாராளுமன்ற உறுப்பினர்) சந்தித்து குரு ஆசியையும் பெற்றுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment