இழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கிழக்கின் இந்து எழுச்சி விழா ஞாயிற்றுக் கிழமை (12) மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது போரதீவுப் பற்று கல்விக் கோட்டத்திலிருந்து இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், அவர்களைக் கற்பித்த ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றுச் சென்ற போரதீவுப்பற்றுக் கோட்டக்கல்வி அதிகதரி பூ.பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இந்து இளைஞர் மன்றங்களுக்கு பஜனைகளை நடாத்துவதற்குரிய இசைக்கருவிகள், கூட்டு பஜனை பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் போன்றோருக்கும் இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேற்படி அமைப்பின் தலைவர் த.துசியந்தன் தலைமையில் நடைபெற்ற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து மதத் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment