மட்டக்களப்பு கல்லடியில் உள்ள மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் (வயது 25) காத்தான்குடி நகரில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து அவர் விற்பனைக்காக எடுத்துச் சென்ற 500 கிராமுக்கும் கூடுதலான கஞ்சா மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
மேற்படி மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே தாம் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில்; ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் சட்ட விரோத சாராயம், போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனைத் தடுப்புப் போன்ற கடமைகளுக்காக உள்ளவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment