மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற் கரையோரத்தை அண்டிய பகுதியில் சுனாமி வரப்போகின்றது என்கின்ற பீதி புதன் கிழமை (15) முற்பகல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறுகின்ற நிலமையும் காணப்பட்டன.
கரையோரதில் அமைந்துள்ள கிணற்று நீர் திடீரென வற்றியுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது….
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் மக்கள் மத்தில் சுனாமி என்ற பீதி ஏற்பட்டு மக்கள் பீதியடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மக்கள் வதந்திகளைக் கேட்டு அச்சமடையத் தேவையில்லை எனவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அச்சம் கொண்டு பீதியடைந்து அல்லோலகல்லோலப்பட வேண்டாம். என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment