தகவல் அறியும் உரிமை, மற்றும் அமுல்ப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களைத் தெழிவூட்டும் நாமாடு புதன் கிழமை 915) மட்டக்களப்பு கிறிஸ்த்தவ வாலிர் சங்கத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்ளின் பிரதிநிதிகள், அரச அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் காலந்து கொண்டிருந்தனர்.
மாற்றுக் கொள்கை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகேயின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சீரேஸ்ட்ட சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா கலந்து கொண்டு கருத்துக்களையும் விளக்கங்களையும் வழங்கினார்.
இதன்போது தகவல் உரிமைகள் பற்றிய கையேடுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment