16 Nov 2017

நாட்டிலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்களில் பொதுமக்கள் ஆளுகை செலுத்தக்கூடியது தகவல் அறியும் சட்;டம் மாத்திரமே தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவா

SHARE
நாட்டிலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்களில் பொதுமக்கள் ஆளுகை செலுத்தக்கூடியது தகவல் அறியும் சட்;டம் மாத்திரமே என தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை 15.11.2017 தகவல் அறியும் உரிமை மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில் பொது மக்களைத் தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அங்கு பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்த அவர் மேலும் கூறியதாவது@

புதிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் குறித்தொதுக்கபப்ட்டுளள அனைத்து விடயங்கள் சம்பந்தமான தகவல்களையும் அதிகாரிகள் வழங்கியாக வேண்டும்.

பொது மக்களுக்குத் தகவலை வழங்கிய காரணத்தினால் எந்தவொரு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் தகவல வழங்கவில்லை என்பதற்காக எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை பொது மகக்ளுக்கு உண்டு.

நமது நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன.
அந்த அனைத்து சட்டங்களையும் நடைமுறைபபடுத்துபவர்கள் அதிகாரிகள்.
ஆனால், இந்த தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு பொதுமக்களுக்கு உண்டு. இதுவே இந்த சட்டத்தின் சிறப்பம்சமாகும்.
தகவல்களை வழங்குவதுதான் சட்டமாக்கப்பட்டுள்ளது. அதேவேளை தகவல்களை மறைத்து வைப்பது சட்டமாக்கப்படவில்லை.
தகவல்களைத் தரமுடியாவிட்டால் அதனை ஏன் தர மறுக்கின்றார்கள் என்பதை அந்த அதிகாரிகள் எழுத்து மூலம் கோரிக்கையாளருக்குத் தெரியப்படுத்;த வேண்டும்.

முழுமையாக மக்கள் சார்பாகவே இந்த சட்டம் உள்ளது. மாறாக அதிகாரிகள் சார்பாக அல்ல.

என்னென்ன தகவல்களை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்ற விவரங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் பாதிக்கப்படாதிருக்கவும், ஊழல் மோசடிகள், சீர்கேடுகள், துஷ்பிரயோகங்கள் இடம்பெறாதிருக்கவும்,  அபிவிருத்தியை நோக்கி அனைவரும் பயணிக்கவும் இந்த சட்ட மூலம் பெருந்துi புரியும்.

ஆயினும், இந்த சட்ட மூலத்தி;ல் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் மக்கள் அனைவரும் தெளிவடைந்து அதனை அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாகும்” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்ளின் பிரதிநிதிகள், அரச அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் காலந்து கொண்டிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: