மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் நோக்குடனான நிகழ்வு எதிர்வரும் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் நடத்தப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை கோபுரங்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறு, மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லடி, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி, கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்குடா, கோரணைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகரை( ஊரியன்கட்டு) ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த தினத்தில் நடைபெறும் நிகழ்வு ஒரு ஒத்திகை நிகழ்வேயாகும்.
இந் நிகழ்வில் அப்பிரதேச மக்கள் பங்கு கொள்ளவும். ஏனையோ இது குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் வேண்டிக்கொண்டார்.
அதே நேரத்தில் பின்வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்பு கொள்ள முடியும்.
மாவட்ட செயலகம் - பிரதான கட்டுப்பாட்டு நிலையம் - 0773957885
கோட்டைக்கல்லாறு,
எஸ்.கணாதீபன் 0778466775
புதுக்குடியிருப்பு, - ஆர்.ரமேஸ்வரன் - 0772271441
காத்தான்குடி,
திருமதி கே.கோபாலசிங்கம் 0775362036
கல்லடி, ரி.அசோக்குமார் 0779674180
களுவன்கேணி, பி.மதுசுதன் 0773202082
கல்குடா, எம்.சுரேஸ்குமார் - 0776521762
வாகரை( ஊரியன்கட்டு) க.புவிதரன் - 0770416489
0 Comments:
Post a Comment