12 Nov 2017

களுதாவளை சிறார்களின் ஜிமிக்குக் கம்மல் - கலைவிழா (வீடியோ)

SHARE
களுதாவளை சிறார்களின் ஜிமிக்குக் கம்மல்  - கலைவிழா குழந்தைகளின் 90 வீதமான மூளைக்கலங்கள் விருத்தியடைந்து 3 வயது பூர்தியடைந்ததும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.


குழந்தைகளின் 90 வீதமான மூளைக்கலங்கள் விருத்தியடைந்து, அவர்கள் 3 வயதைப் பூர்தியடைந்ததும், அனைத்து சிறுவர்களும் முன்பள்ளிகளுக்குச் செல்லவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. தாய் கருவுற்ற காலத்திலிருந்து குழந்தை பிறந்து 5 வயது காலம்வரை குழந்தைகள் மீது ஒட்டுமொத்த சமூகமும் அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும்.  3 வயது பூர்த்தியடைந்ததும் முன்பள்ளிகளில் சிறார்கள். பல்வேறு பழக்க வழக்கங்கள், பண்பாட்டு விழுமியங்கள், உள்ளிட்ட சமூகமயமாக்கல் செயற்பாடகளையும் அங்கு கற்றுக் கொள்கின்றார்கள்.

என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திருமதி.சீவரெத்தினம் அருந்ததி தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாளை விபுலாநந்தா முன்பள்ளி மாணர்களின் இவ்வருடத்திற்கான கலை விழா சனிக்கிழமை (11) மாலை மேற்படி முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்பள்ளி ஆசிரியைகளான திருமதி.குணாளன் கஸ்தூரி, எஸ்.சோபிகா, ஆகியோரின் நெறிப்படுதலுடனும், பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் நடைபெற்ற இக்கலை விழாவில் சின்னம் சிறு மாணவ மணிகள் தங்களது கலைத் திறமைகளை  வெள்ளிப்படுத்தினர்.

ஆடல், பாடல், கவிதை, நாடகம் என ஆங்கிலத்திலும், தமிழிலும்  அரங்கேற்றினர்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திருமதி.சீவரெத்தினம் அருந்ததி, களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கணேசபிள்ளை, ஓய்வு நிலை அதிபர் த.சுந்தரலிங்கம், மற்றும் பொது  அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மேலும் கருத்துத் தெரிவித்த அருந்ததி …. 

முன்பள்ளிகளுக்கு சில குழந்தைகள் விரிந்த சிந்தனையுடையவர்களாகவும், சில குழந்ததைகள் குறுகிய நித்தனை உடையவர்களாகவும் வருகின்றார்கள். ஆனால் அங்கு அனைத்துக் குழந்தைகளுக்கும் பயிற்சிகள், நெறிமுறைகள் வழங்கப்பட்டு விரிந்த சிந்தனையுடயவர்களாக மாற்றப்படுகின்றார்கள்.

சிறுவர்களாலும்  பலதுறைகளிலும் மிளர முடியும் என்பதை இங்கு நிரூபித்து இருக்கின்றார்கள், குழந்தைகளின் திறமைகளை இழமையிலே அடையாளம் காண்கின்றபோது அவர்களை எதிர்காலத்தில் உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லலாம். குழந்தைகளுக்குள்ளே மறைந்து கிடக்கும் திறமைகளை இனங்கண்டு அத்துறைகளினூடாக அவர்களை மிளரச் செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.































SHARE

Author: verified_user

0 Comments: