வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை 15.11.2017 அதிகாலையிலிருந்து பொழுது புலரும் வரை பனி மூட்டம் நிலவியது.
ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, படுவான்கரைப் பிரதேசம், உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலவிய இந்த பனி மூட்டத்தால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சத்துடன் மிகுந்த அவதானமாகப் பயணிக்க வேண்டியிருந்தது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம் பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
வழமைக்கு மாறாக காணக்கிடைக்காத வகையில் நகரப் பகுதிகளில் நிலவிய பனி மூட்டத்தை சிறுவர்கள் ஆச்சரியமாக கண்டு களித்தனர்.
0 Comments:
Post a Comment