மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் இளம் தாய், மற்றும் அவரது மகன் ஆகியோரின் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 1ஆம், 2ஆம், 3ஆம் சந்தேக நபர்கள், எறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் புதன்கிழமை (15.11.2017) விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது சந்தேக நபர்கள் மேலதிக நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்விAdditional Magistrate and
Additional District Judge Muhammath Ismail Muhammath Rizviமேற்படி 3 சந்தேக நபர்களையும் விடுதலை செய்த நீதிவான் ஏனைய 4ஆம், 5ஆம் சந்தேக நபர்களான முன்னாள் எல்.ரீரீஈ உறுப்பினர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷன் (வயது 11) ஆகியோர், கடந்த மாதம் 11ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment