நாற்பத்தி இரண்டு வருட கல்வி சேவையை நிறைவு செய்த கோட்ட கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் அவர்களுக்கு போராதீவுக் கோட்ட அதிபர்கள் சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு கோட்டக்கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை (01) நடைபெற்றது.
பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய பிரத்திக் கல்விபணிப்பாளர் நித்தியானந்தன் அவர்களும் மற்றும் போரதீவுக்கோட்ட பாடசாலைகளைச் சேர்ந்த அனைத்து அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது கோட்கல்வி பணிப்பாளரின் சேவையினைப்பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ட்டதுடன் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்துடன் சேவைகாலத்தில் இவரால் மேற்கொள்ளப்பட்ட கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அதிபர்களும் பாராட்டி உரையாற்றினர்.
0 Comments:
Post a Comment