தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே தெரிவித்தார்.
திங்கட்கிழமை
13.11.2017 இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மட்டக்களப்பில் தகவல் அறியும் உரிமை மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில் பொது மக்களைத் தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
தீர்மானங்களின்போது பிரஜைகள் பாதிப்பிற்குள்ளாவதால், அத்தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டில் பிரஜைகளும் பங்கேற்றல் முக்கியம் பெறுகின்றது.
அதற்கமைவாக தகவல் அறியும் உரிமை மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில் பொது மக்களைத் தெளிவூட்டுதல் அவசியமானது.
தகவல் அறியும் உரிமை என்பது 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட, மக்களது இறைமை அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய அடிப்படை உரிமை ஒன்றாகும்.
அரச மற்றும் பொது அதிகார சபைகளது தீர்மானங்களின்போது பிரஜைகள் பாதிப்பிற்குள்ளாவதால், அத்தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டில் பிரஜைகளும் பங்கேற்றல் முக்கியம் பெறுகின்றது.
அதற்கமைய குறிப்பிட்ட நிறுவனத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் “தகவல்களைக் கோருவதற்காக” பொது மக்களை வலுவூட்டுதல் முக்கியமானதென்பதுடன், இது சனநாயகத்தின் கட்டாய அங்கமொன்றுமாகும். அதற்காகவே மக்கள் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதற்காக மட்டக்களப்பு உட்பட நாடு பூராகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்பட்டு வருகின்றார்கள்”
என்றார்.
0 Comments:
Post a Comment