திருட்டு உட்பட பல்வேறுபட்ட குற்றச் செயல்கள் சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டிருந்ததோடு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தப்பித் தலைமறைவாகி மாறுவேடமிட்டு வாழ்ந்து வந்த நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை 12.11.2017 கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவெம்பு கிராமத்தை சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர் ஏறாவூர், நிந்தவூர், வவுனியா, கிளிநொச்சி என தனது வசிப்பிடங்களை மாற்றிக் கொண்டும் ஒவ்வொரு ஊர்களிலும் வெவ்வேறு வித்தியாசப்பட்ட பெயர்களிலும் போலி முகவரிகளிலும் இந்நபர் நடமாடித் திரிந்த வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து எறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவெம்புக் கிராமத்தில் வைத்து இவரைக் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் உதயகுமார் (புனைப்பெயர்: அப்துல் றஹ{மான் (வயது 33) என்ற இந்நபர் திருட்டு உட்பட பல்வேறு குற்றச் செயல்கள் சம்பந்தமாக பிணையில் சென்றிருந்த வேளையில் மீண்டும் நீதிமன்ற வழக்குகளுக்குச் சமுகமளிக்காததன் காரணமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தவறாளரான குறித்த நபருக்கெதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் 4 வழக்குகள் நிலுவையி;ல் உள்ள நிலையில் இரண்டு பகிரங்கப் பிடியாணைகளும்,
2 சாதாரண பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்களினாலும் குறித்த நபருக்கெதிரான வழக்குகள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார் தாம் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
0 Comments:
Post a Comment