9 Nov 2017

முதலமைச்சுச் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளராக வி.தவராஜா மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக என்.மணிவண்ணன் நியமனம்

SHARE
மாகாண முதலமைச்சுச் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளராக வெள்ளத்தம்பி தவராஜா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக என். மணிவண்ணன் நியமனம் பெற்றுள்ளார். இவ்விருவரும் புதன்கிழமை 08.11.2017 தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இதுவரை மட்டக்களப்பு மாநகர ஆணையாளராகக் கடமை புரிந்து வந்த வெள்ளத்தம்பி தவராஜா கிழக்கு மாகாண முதலமைச்சு செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றதை அடுத்து மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

தற்போது மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மணிவண்ணன், கிழக்கு மாகாண சிறுகைத்தொழில் திணைக்கள பணிப்பாளராகப் பதவி வகித்தவராகும்.

புதிய மாநகர ஆணையாளருக்கு மட்டக்களப்பு மாநகர கேட்போர் கூடத்தில் புதன்கிழமை 08.11.2017 அம்மாநகர அலுவலர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.






SHARE

Author: verified_user

0 Comments: