12 Nov 2017

உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி கிராம சேவையாளரின் மகன் பலி

SHARE
வெருகல் - சந்தலிக்கட்டை ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி இளைஞன் ஒருவன் பலியானதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை  10.11.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த கடுக்காமுனை கிராம சேவையாளரான திருமதி காளிப்பிள்ளை    ஸ்ரீஸ்கந்தராஜா என்பரின் மகன்  பஜிர்வன் (வயது 19) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது@ இந்த இளைஞன் தமது வயலில் உழவு வேலை செய்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் அகப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இடம்பெற்றதை அறிந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஏனையவர்கள் விரைந்தோடி வந்து சில்லுக்குள் சிக்கியிருந்த இளைஞனை மீட்டெடுத்து வெருகல் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இவ்வாண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்தவர் என்றும் இலக்கியம் மற்றும் தொழில்துறைகளில் சிறந்த ஆர்வம் உள்ளவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: