3 Nov 2017

மோட்டார் சைக்கிள் திருட்டு சந்தேக நபரான 18 வயது இளைஞனுக்கு விளக்கமறியல்.

SHARE
மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக கடந்த நான்கு மாதங்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட 18 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மத் முபீன் (வயது 18) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞனாகும்.

சந்தேக நபரை ஏறாவூர் பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில்  புதன்கிழமை 01.11.2017 ஆஜர் செய்தபோது நொவெம்பெர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail Muhammath Rizvi  உத்தரவிட்டார்.

ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் பள்ளிவாசலில் கடந்த 28.06.2017 அன்று தொழுகையை முடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டுச் சென்ற வர்த்தகரான அச்சி முஹம்மது முஹம்மது றாபி (வயது 30)  என்பவரின் மோட்டார் சைக்கிள் 10 நிமிட இடைவெளியில் திருடப்பட்டிருந்தது.

அவரது முறைப்பாட்டுக்கமைவாக வீதிகளிலுள்ள காணொளிக் கமெராக்களின் உதவி கொண்டும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேக நபரான இளைஞனைக் கைது செய்திருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: