ஏறாவூர் சவுக்கடி கிராமத்தில் இளம் தாயும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர்க் கிளை விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை 19.10.2017 வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@
ஏறாவூர் நகர பிரதேசத்திற்கு அருகிலுள்ள, முருகன் கோவில் வீதி, சவுக்கடி, கிராமத்தைச் சேர்ந்த மதுவந்தி என்ற 26 வயது தாயும் மதுஷன் என்ற 11 வயது மகனும் படுக்கையறையில் வைத்து உறக்கத்தில் இருந்த வேளையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயலாகும்.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் சமூகப் பாதுகாப்பை கட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு சமுதாயத்தின் மீதும் கடமையாகும்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும், அந்நியோந்ய உறவும், பரஸ்பர பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
அத்துடன் இப்பாதகச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, சட்டத்திற்கு முன் கொண்டுவந்து, பாரபட்சமற்ற முறையில் தண்டனை வழங்குவதை பாதுகாப்புத் தரப்பினர் உறுசெய்யவேண்டும் என்பதையும் ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்தி நிற்கின்றது.
0 Comments:
Post a Comment