ஏறாவூர், ஐயங்கேணி அரிசி ஆலையொன்றில் வேலை செய்த தொழிலாளி ஒருவர் அதன் மாடிப்படியிலிருந்து சறுக்கி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பயனின்றி மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சந்திவெளி கிராம வாசியான செல்லத்தம்பி மனோகரன் (வயது 43) என்பவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணித்துள்ளார்.
கடந்த 16.10.2017 அன்று மாலையில் மேற்படி அரிசி ஆலையில் உள்ள மாடிப்படியில் ஏறும்போது இவ்விபத்து நேர்ந்துள்ளது.
கீழே விழுந்த அவருக்கு தலைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில் மயக்கமடைந்திருந்த அவர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை 18.10.2017 பிற்பகல் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment