சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலை விழாவும் வியாழக்கிழமை 05.10.2017 காலை மட்டக்களப்பில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வின் தொடக்கமாக கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தர் சமாதியிலிருந்து அழகியற் கற்கைகள் நிறுவகம் வரை ஊர்வலம் சென்றதுடன் நிறுவகத்தில் அதிதிகளுக்கு கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டது.
முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைபு;பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன், இந்து மத விவகார முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை, கிழக்குப் பல்கலைக்கழ வேந்தர் வேல்முருகு விவேகானந்தராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும் இன்னும் பல அதிகாரிகளும் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களும் கலை ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைபு;பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த 3 நாள் மாநாட்டையும் கலைவிழாவையும் ஏற்பாடு செய்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment