பன்மொழி வித்தகரான சுவாமி விபுலாநந்த அடிகளார் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்குமாக தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலாந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலைவிழாவும் இறுதி நாள் நிகழ்வு சனிக்கிழமை 07.10.2017 மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த அரசியலாளர்கள், அறிவியலாளர்கள், அருளாளர்கள் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் அரசியலாளர் அதிஉயர் அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர் தொடர்ந்து பேசுகையில், சுவாமி விபுலாந்தர் அவர்கள் தன்னுடைய முழு வாழ்க்கையையும் மக்களுடைய நலனுக்காக அர்ப்பணித்திருந்தார்கள்,
பிரபல்யமான கல்விமான் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ{டன் இணைந்து வறிய முஸ்லிம் மக்களுக்காகவும் அவர் தனது பங்களிப்பைச் செய்வதற்கு பின்னிற்கவில்லலை.
பன் மொழி வித்தகரான சுவாமி அவர்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் நூல்களை மொழி பெயர்த்துத் தந்தார்.
அதில் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான ஆங்கில நூல்களும் அடங்கும்.
பொதுவாக மக்களுக்கு கல்வியளிப்பதில் அவர் பாரிய பங்களிப்புக்களைச் செய்திருந்தார்.
விஷேடமாக வடக்கு கிழக்கில் பல பாடசாலைகளை ஆரம்பித்தார்.
வறுமையானவர்களகை; கவனிப்பதில் கூடிய அக்கறையுடனிருந்தார்.
ஒட்டுமொத்த மனித சமுதாயத்தினுடைய சேவைக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம்.
அதன் காரணமாக இலங்கையில் வாழும் மக்களால் சுவாமி அவர்கள்; மதிக்கப்பட்டார்கள். இலங்கையிலும் ஜேர்மனியிலும் தபால் தலையாக அவரது நினைவு முத்திரை வெளியிடப்பட்டது சிறப்பம்சமாகும்.
அவருடைய கொள்கைகள், படிப்பினைகள், அவருடைய செயற்பாட்டின் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் மாற்றமடையக் கூடாது, அவை அழியக் கூடாது. அதனை அப்படியே அடியொற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
இவ்விதமான செயற்பாடுகளினூடாக மக்களுக்கு நாம் அறிவூட்டுகின்றோம். விபுலாநந்த அடிகளார் சமகாலத்தில் எங்களுடன் இல்லாதிருக்கலாம்., ஆனால், அவருடைய வாழ்க்கைப் படிப்பினைகள், சேவைகள், சிந்தனைகள் மக்களிடையே பரப்பப்பட வேண்டும். அதன் மூலம் மக்கள் நன்மையடைவார்கள்.” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர், முன்னாள் பேராசிரியர் எஸ். மௌனகுரு உட்பட இன்னும்பல கல்வியியலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment