மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாழடைந்த இணறு ஒன்றில் ஆண் ஒரவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான மட்டக்களப்பு கல்முனை பிரதான வீயில் அமைந்துள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வெளிவருவதாக வெள்ளிக்கிழமை (06) மாலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த பொலிசால் குறித்த கிணற்றினுள் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
சுமார் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண் எனவும், ஆனால் அவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் பரிசோதனைப்பிரிவு மற்றும், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பரிசோதனை மற்றும் நீதிபதியின் உத்தரவுக்கமைய கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment