ஆரையம்பதி பிரதேசத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குச் சென்று கொண்டிருந்த வயோதிபர் மயங்கி விழுந்து மரணமடைந்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 01.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் தனியாக வாழ்ந்து வந்த ஆரையம்பதி எல்லை வீதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை மாசிலாமணி (வயது 74) என்ற முதியவரே மூர்ச்iயாகி விழுந்து மரணித்தவராகும்.
இவர் மேற்படி எல்லை வீதியூடாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவ்விடத்தில் நின்றவர்களால் ஆரையம்பதி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment